ஓமிக்ரான் வைரஸ் 'விமானம்' வழியா மட்டும் 'இந்தியா'வுக்குள்ள வரல...! - 'ஷாக்' தகவலை சொன்ன முன்னாள் CSIR தலைவர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரசின் உருமாற்றம் அடைந்த வெரின்ட்யான ஒமிக்ரான் வைரஸ் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது இந்த ஒமிக்ரான் வெரின்ட் அதிவேகமாக 20 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ளது.
அதோடு, இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் மருத்துவர், ஒருவர் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்லாதவர். மேலும் இவரிடம் தொற்று ஏற்பட்டதற்கான, எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
இது தொடர்பாக இந்திய அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி அமைப்பான, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (CCMB) முன்னாள் தலைவர் ராகேஷ் சர்மா ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில், 'ஒமிக்ரான் வைரஸ் தொற்று தென் ஆப்பரிக்காவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கி பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது எந்த நாடுகளுக்கும் செல்லாத பெங்களூரு மருத்துவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அதிக மாற்றமடைந்த தொற்று விமானம் மூலம் மட்டும் வரவில்லை, இங்கேயே இருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஏற்கனவே இந்த வகை தொற்று இருக்கலாம். கொரோனா வைரஸின் உருமாறிய டெல்டா வைரஸ் போன்று, ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனால் அதிவேகமாக பரவும் ஒமிக்ரான் வைரஸ் சமூக பரவலுக்கான வாய்ப்புகள் இருந்தாலும், மிகப்பெரிய பாதிப்புகள் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்..