இப்போ நான் 'இத' நெனச்சு 'சிரிக்குறதா' இல்ல 'அழுறதா'ன்னு தெரியலங்க...! - அகிலேஷ் யாதவ் ஆதங்கம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவிற்கு மாட்டுச் சாணக் குளியல் குறித்த சம்பவத்திற்கு உத்திர பிரதேச மாநில முதல்வர் ஆதங்கமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அபரிவிதமாக பரவி வருகிறது. அதோடு வடமாநிலங்களில் சில பகுதிகளில் கொரோனா தொற்று ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது எனலாம்.
இந்நிலையில் ஒரு சில கட்சிகளை சேர்ந்த எம்.எல்.எக்கள் மட்டுமல்லாமல், உயரிய பதவியில் இருக்கும் அமைச்சர்களும், எம்.பிகளும் இந்நேரத்தில் மக்களுக்கு மூடநம்பிக்கை விளைவிக்கும் செயல்களை செய்தும் பரிந்துரைத்தும் வருகின்றனர்.
குறிப்பாக, குஜராத்தில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயாணா குருகுல் விஸ்வித்யா பிரதிஷ்டான் சார்பில் நடத்தப்படும் கோ-சாலையில், கொரோனா தாக்காமல் இருக்க மாட்டுச் சாணம் சிகிச்சை அளிக்கப்பட்டது சர்ச்சசையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பலரும் மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்டு, மாட்டுப்பால் மற்றும் மோர் ஆகியவற்றால் உடலை சுத்தம் செய்து மாட்டுச் சாணம் குளியல் எடுத்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதனைக் குறித்து அறிந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், இந்நிகழ்வை கிண்டலாகவும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'இதை நினைத்து அழுவதா, சிரிப்பதா?' என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, அதில் 'இந்த மாதிரியான சிகிச்சையால் எந்தப் பயனும் இல்லை. உடலின் கழிவுதான் மாட்டுச் சாணம். அதை உடலில் பூசிக்கொள்வதால் எந்த எதிர்ப்பு சக்தியும் ஏற்பட போவதில்லை'.
கொரோனா வைரஸ் பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் தத்தளித்து வரும் நிலையில் மக்களுக்கு இதுபோன்ற முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை கொண்டு செல்வது மேலும் பெரும் பிரச்சனைகளை கொண்டு வரும் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.