VIDEO: “சிம்மராசிக்காரர் தோனி .. 7-ஆம் நம்பர் சரியில்ல!.. CSK ரசிகர்கள் CUP-அ மறந்துடுங்க!”.. IPL ஜோதிடர் அதிரடி! முழு வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Oct 13, 2020 06:56 PM

ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த சிஎஸ்கே அணியை பற்றியும் தோனி பற்றியும் ஐபிஎல் ஜோதிடர் ஆரிய வர்தன் பேட்டி அளித்துள்ளார்.

Dhoni number will not help, CSK fans forget Cup, says astrologer

அதில், “ஐபிஎல் சீசன் 13 ல் இதுவரை நடந்த போட்டிகளில் 20 ஆட்டங்களில் முதலில் பேட் செய்பவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெங்களூரு அணி மற்றும் சென்னை அணி மட்டும்தான் இதிலிருந்து மாறி இருக்கிறது. மற்ற அணிகளுக்கு இது பொருந்துகிறது. ஆனால் இந்த வருடம் தோனிக்கு ஏன் இவ்வளவு பிரச்சனைகள் என்றால், ஏழாம் தேதி, ஏழாம் மாதம், அவர் பிறந்ததும், ஏழாம் நம்பர் ஜெர்சியை அவர் அணிந்திருருப்பதும்தான். இந்த நம்பரில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் பிரச்சினைக்குரிய வருடமாக இருக்கிறது. அத்துடன் தோனி சிம்ம ராசியில் பிறந்திருக்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் 4-ஆம் இடத்தில் கேது இருக்கிறார். அதேபோல் சிம்ம லக்னத்திற்கு 10-ஆம் இடத்தில் ராகு இருக்கிறார். அதனால் உத்தியோகம் சிறந்ததாக இருக்காது. அப்படி இருப்பின் யாருமே நல்லா விளையாட மாட்டார்கள்.

அதனால் தோனிக்கு இதுவே கடைசியா ஐபிஎல் ஐபிஎல். முடிந்தது அவரைப் பொருத்தவரை. யாராக இருந்தாலும் ஏழாம் நம்பரில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் வெற்றி இருக்காது. அப்படித்தான் கமல்ஹாசனின் நம்பர் 7. ஆனால் அவருக்கு இப்போது திரைப்படங்களில் அவ்வளவு வெற்றி இல்லை. ஏழாம் நம்பரில் பிறந்தவர்கள் ஒரு பத்து வருடம் செய்ய வேண்டியதை ஒரே நாளில் அடைந்து விடுவார்கள். ஆனால் இறுதிகட்டத்தில் வெற்றி இருக்காது.

அதனால் தோனிக்கு இந்த வருடம் சரி இருக்காது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபிமானிகள் இந்த வருடம் தயவுசெய்து அதை அவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம். கப் கிடைக்காது. அந்த ஆசையை தயவுசெய்து கை விட்டு விடவும். சும்மா சென்னை ஜெயித்து விடும் ஜெயித்து விடும் என என காலத்தில் மக்களுக்கு இது ஒரு கூடுதல் டென்ஷனாகவே இருக்கிறது.”

என தொடர்ந்து ஜோதிடர் பேசியிருக்கும் வீடியோவை இணைப்பில் காணலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dhoni number will not help, CSK fans forget Cup, says astrologer | Sports News.