என்னங்க சொல்றீங்க இது டிரஸ்ஸா..! ‘நீங்க நம்பலனாலும் அதான் நெசம்’.. செம ‘வைரல்’..!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Selvakumar | Dec 05, 2020 09:11 AM

சாக்குப் பைகளை வைத்து தயாரிக்கப்பட்ட ஆடைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Potato sack pants are the latest fashion trend

தற்போது ஃபேஷன் என்ற பெயரில் விதவிதமான ஆடைகள் வர ஆரம்பித்துவிட்டன. ஒவ்வொரு ஆடையிலும் புதுமையான பல விஷயங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை எளிதில் கவர்ந்து விடுகின்றனர். அதிலும் வித்தியாசமான ஆடைகளுக்கு தனி ரசிகர்களே உள்ளனர். கறையுடன் கூடிய டிரஸ், கிழிந்த டிரஸ் போன்றவற்றை ஃபேஷன் என சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது புதிய டிரஸ் அறிமுகமாகியுள்ளது.

அதாவது நம் ஊரில் எளிதில் கிடைக்கும் சாக்குப் பைகளே ஆடைகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை ஆயிரக்கணக்கான விலைக்கு விற்கப்படுவதுதான் கூடுதல் ஆச்சரியம். இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சாக்குப் பைகளில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகளை கூட மாற்றாமல் ஆடையில் அப்படியே இருக்கின்றன. அதில் தைக்கப்பட்ட நூல் கூட பெரிது பெரிதாக சாக்குப் பையை தைப்பது போலவே இருக்கிறது. இந்த ஆடையை அணிந்தால் ஒரு சாக்குப் பையையே மாட்டிக் கொண்டது போன்ற ஒரு உணர்வுதான் இருக்கும் என பலரும் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆடையை வாங்குவதற்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை வாடிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த சிலர் ‘இதெல்லாம் ஒரு டிரஸ்ஸா?’ என்றும் ஒரு சிலர் ‘வித்தியாசமா சூப்பரா இருக்கே’ என்றும் கலவையாக விமர்சித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Potato sack pants are the latest fashion trend | Fun Facts News.