"திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்!".. பாஜக நிர்வாகி குஷ்பு காட்டம்!.. வலுக்கும் பாஜக - விசிக மோதல்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதத்தின் பெயரால் பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார்.

மனு தர்மத்தில் பெண்கள் குறித்து கூறப்பட்டிருந்ததாக திருமாவளவன் பேசிய வீடியோ க்ளிப் ஒன்று ட்விட்டரில் வைரல் ஆக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தியது சரியா? அவர் பேசியது மிகவும் தவறு.
கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக இதுபற்றி வாய் திறக்காதது ஏன்?
கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியதை திமுக, காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டில் உள்ளவர்களிடமே கொண்டு சேர்க்காதவர்கள் மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.

மற்ற செய்திகள்
