என்னங்க சொல்றீங்க...? 'பேரக்குழந்தைகளே மொத்தம் 126 பேர் இருக்காங்க...' - 90'ஸ் கிட்ஸ்-க்கு 'இடி' விழுற மாதிரி ஒரு செய்தி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாகலாந்தில் ஒருவர் சுமார் 36 முறை திருமணம் செய்து கொண்டதும், அதுபோதாது என மீண்டும் 37வது முறை திருமணம் செய்து கொண்ட சம்பவம் 90'ஸ் கிட்ஸ்-க்கு பெரும் இடியாக விழுத்துள்ளது.

நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த நபரின் திருமண வீடியோவை, நாகலாந்து ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தநிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ வைரலாக காரணம் அது அந்த நபரின் 37வது திருமணம். இதுவரை அவருக்கு 36 முறை திருமணம் நடந்தது போதாது என தற்போது 37 ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது வரை 28 மனைவிகள், 35 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு அந்த நபர், தன் 28 மனைவிகள் 35 குழந்தைகள் 126 பேரக் குழந்தைகள் முன்னிலையிலேயே புதிய பெண்ணுக்கு தாலி கட்டினார்.
இந்த வீடியோ தமிழகத்தில் இருக்கும் 90'ஸ் கிட்ஸ்க்கு பெரும் இடியாக விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
