இனிமேல் இ-பதிவு முறையில் 'இந்த' காரணத்தை சொல்லி ஊருக்கு போக முடியாது...! ஏன் அந்த பிரிவை நீக்கினோம்...? - விளக்கம் அளித்த தமிழக அரசு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசு கொரானா பரவுவதை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது இந்த நிலையில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு இ-பதிவு முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இணைய பதிவு மேற்கொள்வது இன்று முதல் அவசியம் என அறிவிக்கப்பட்டது.
இதில் தனிநபா்கள் நான்கு வகையான காரணங்கள் இருந்தால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள முடியும். மருத்துவ அவசரம், முதியோா் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சாா்ந்த காரியங்கள், திருமணம் ஆகிய காரணிகள் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருமணம் என்ற பிரிவை இ-பதிவிற்கான வலைதளத்திலிருந்து தமிழக அரசு நீக்கியுள்ளது.
இந்த நிலையில் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் பயன்படுத்தி ஊருக்கு செல்வதன் மூலம் அதிகமான மக்கள் வெளியே வரும் சூழல் எழுந்துள்ளதால் அந்த பிரிவை நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.