காரில் எரிந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர்.. வேறோரு ஊரில் சிக்கிய திகிலூட்டும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானா மாநிலம், வெங்கடாபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தர்மா நாயக். இவர் ஹைதராபாத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக தர்மா சென்ற கார் எரிந்த நிலையில் கிடந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் சம்பவ இடம் விரைந்த அவர்கள் காரில் இருந்து நபர் ஒருவரின் உடலை மீட்டதாக தெரிகிறது. மேலும் அது தனது கணவர் தர்மா என்றும் அவரது மனைவி நீலா போலீசாரிடம் கூறி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து நீலாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் அவசர அவசரமாக உடலை வாங்கிக் கொண்டு சென்றதும் போலீசார் முன்பு மட்டும் கண்ணீர் விட்டு அழுததும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து கணவர் இறப்பிற்கு பின்னர் அவரது இறப்புச் சான்றிதழ் பெற்று உடனடியாக கோடிக்கணக்கான காப்பீட்டு தொகையும் நீலா பெற முயற்சித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர் அவரது செல்போனை வாங்கி ஆராய்ந்த போது தான் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
வேறொரு பகுதியில் தர்மா உயிருடன் இருப்பதாகவும், அவருடன் நீலா பேசி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ள நிலையில், தர்மாவை அழைத்து வந்து தெலுங்கானாவில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளியாகி உள்ளது. ஸ்டார்க் மார்க்கெட் மூலம் பல லட்சம் பணத்தை இழந்துள்ள தர்மா, அதனை மீட்க வழி தேடிய போது தான் காப்பீடு மூலம் 7 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்பதை தெரிந்துள்ளார். தன் இறப்பிற்கு பின்னர் தான் அந்த பணம் கிடைக்கும் என்பதால் தன்னைப் போன்ற உருவமுள்ள நபரை கொலை செய்து தான் இறந்து விட்டதாக நம்ப வைக்க திட்டம் போட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இதற்காக பழைய கார் ஒன்றை வாங்கி, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த திட்டத்தை அவர் செயல்படுத்தவும் செய்துள்ளார். அதன்படி பாபு என்ற கார் ஓட்டுநரை அழைத்து வந்து, அவருக்கு தர்மாவின் உடைகளை அணிவித்து வெங்கடாபுரத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அங்கே சென்றபின் பாபுவை கொலை செய்துவிட்டு காரின் முன் இருக்கையில் உட்கார வைத்து பெட்ரோல் ஊற்றி அவர்கள் கொளுத்தி உள்ளதும் தெரியவந்துள்ளது. அதன் பின்னர்தான் தர்மா இறந்ததாக அனைவரும் சேர்ந்து நாடகம் ஆடி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தர்மா, அவரது மனைவி நீலா உட்பட ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்
