அப்படி போடு… முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பென்ஷன் உயர்வு… BCCI அறிவித்த சூப்பர் தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான பென்ஷன் தொகையை அதிகபட்சம் இருமடங்கு வரை உயர்த்தியுள்ளது.
BCCI
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியங்களுள் ஒன்றாக இந்தியாவின் BCCI உள்ளது. BCCI நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகின் செல்வாக்கு மிக்க டி 20 லீக் போட்டிகளில் ஒன்று. இந்நிலையில் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கும் ஊதியமும் அதிகமாகவே உள்ளது. அதுபோலவே பிசிசிஐ தனது முன்னாள் ஊழியர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இதை அதிகமாக்க வேண்டும் என சமீபகாலமாக குரல்கள் எழுந்து வந்தன.
பென்ஷன் உயர்வு…
இந்நிலையில் தற்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டிவீட்டில் “மாத ஒய்வூதியமாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட உள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சுமார் 900 பேர் இதனால் பயன்பெறுவார்கள். கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் இப்போது பெறும் ஓய்வூதியத்தை விட இருமடங்கு பெறுவார்கள்” என்று அறிவித்துள்ளார்.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் சாதனை…
பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர்களின் ஐந்து ஆண்டுகளுக்கான ஒளிபரபப்பு உரிமம் நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது. பேக்கேஜ் A பிரிவில் இந்திய தொலைக்காட்சி உரிமமும, B பிரிவில் இந்தியாவின் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான உரிமமும், பேக்கஜ் C- யில் சீசனின் தொடக்க போட்டியும், பிளே ஆஃப் போட்டிகளுக்கான ஏலமும், பேக்கஜ் D-யில் உலக அளவிலான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்திற்கான ஏலம் என நான்காக பிரித்து ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேக்கேஜ் A மற்றும் B மூலமாகவே 43000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.