'சரியா மூடாத கதவு'...'அந்த ரூம்ல போய்ட்டு துணியை கழட்டுங்க'... அதிர்ந்து நின்ற பெண் ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 21, 2020 04:35 PM

மாநகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர்களை மருத்துவ பரிசோதனைக்கு நிர்வாணமாக நிற்க வைத்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Surat : Women Municipal Trainee Clerks forced to stand naked for test

குஜராத் மாநிலம் பூங் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் மாணவிகள் 68 பேருக்கு மாதவிடாய் இருக்கிறதா? என அவர்களின் ஆடைகளை அவிழ்த்து நடத்தப்பட்ட சோதனை, நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில், சூரத் மாநகராட்சியில் பயிற்சி அலுவலர்களாக இருக்கும் பெண் ஊழியர்கள், நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் கடும் புயலை கிளப்பியுள்ளது.

சூரத் மாநகராட்சியில் பயிற்சி அலுவலர்களாக பணியாற்றும் 100 ஊழியர்கள், கட்டாய மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு நடத்தும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள அறையில் பெண் ஊழியர்கள் நிர்வாணமாக வெகு நேரம் நிற்கவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண்கள் 10 பேர் கொண்ட குழுவாக பிரிந்துள்ளனர். அந்த அறையிலும் கதவு சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது.

வெளியில் இருந்து யாரும் அவர்களை பார்க்காமல் இருக்க ஒரே ஒரு திரை மட்டும் போடப்பட்டிருந்ததாக ஊழியர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் அங்கிருந்த திருமணமாத பெண் ஊழியர்களிடம் நீங்கள் எப்போதாவது கர்ப்பமாக இருந்தீர்களா? என அங்கிருந்த பெண் டாக்டர்கள் தேவையற்ற கேள்விகளை கேட்டதாகவும் குற்றம் சட்டியுள்ளார்கள். இதனிடையே நடந்த சம்பவம் குறித்து மாநகராட்சி கமி‌ஷனரிடம் புகார் தெரிவித்துள்ள அவர்கள், ''இதுபோன்ற சோதனை வேறு எங்கும் நடத்தப்பட்டதாக நாங்கள் கேள்விபட்டதில்லை'' என கூறியுள்ளார்கள்.

இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை மகளிர் மருத்துவதுறை தலைவர் அஸ்வின் வச்சனி, ''எங்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டுதலின் படியே பெண்களுக்கு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். பெண்கள் வி‌ஷயத்தில் நாங்கள் வழிமுறையை பின்பற்றுகிறோம்'' என கூறியுள்ளார்.

Tags : #MUNICIPAL TRAINEE #NAKED #SURAT #SURAT MUNICIPAL CORPORATION