'சுளையா 1 லட்சம் சம்பளம் தரோம்'... 'இந்த வேலையை பாக்க ரெடியா'... 'தெய்வமே நாங்க ரெடி'... 'வாயடைத்து போன இளைஞர்கள்'... குவியும் விண்ணப்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாதம் ஒரு லட்சம் சம்பளம் தருகிறோம், ஆனால் நீங்கள் வேலை செய்ய வேண்டாம் தூங்கினால் மட்டும் போதும் எனக் கூறினால் யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு அறிவிப்பைத் தான் பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

தூக்கத்தைப் பற்றி ஆய்வு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் வேக்ஃபிட். இந்த நிறுவனமானது மெத்தைகளை உற்பத்தி செய்து வருகிறது. இதன் மெத்தைகளின் தரத்தைப் பரிசோதிக்கவும், அதில் உறங்குவோர் எப்படித் தூங்குகின்றனர், அவர்களின் அனுபவம் என்னவென்பதை ஆராய்வதற்காக வேக்ஃபிட் நிறுவனம் கடந்த ஆண்டு இண்டர்ன்ஷிப்களை அறிமுகப்படுத்தியது. அது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சீசனில் பங்கேற்றவர்கள் 100 நாட்களுக்கு உறங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதற்கு நல்ல ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. தற்போது வேக்ஃபிட் நிறுவனம் இரண்டாவது சீசனுக்கான இண்டர்ன்ஷிப்பை அறிவித்துள்ளது . இதில் பங்கேற்பவர்கள் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்க வேண்டும். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் யார் தான் சும்மா விடுவார்கள்.
இதனால் கடந்த சீசனில் இண்டர்ன்ஷிப்புக்காக 1.65 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். தற்போதைய சீசனில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது. இந்த இண்டர்ன்ஷிப் மூலம், ஆய்வில் பங்கேற்பவர்களின் உறக்க முறையைக் கண்காணிக்க வேக்ஃபிட் திட்டமிட்டுள்ளது. அதோடு வேக்ஃபிட் மெத்தையைப் பயன்படுத்தும்போதும், பயன்படுத்தாதபோதும் தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே பணம் எப்போது கிடைக்கும் என்பது பலரின் கேள்வியாக இருக்கும். அதன்படி நீங்கள் 100 நாட்களுக்கு 9 மணி நேரம் உறங்கியதற்கான விவரங்களைச் சமர்ப்பித்தபின் உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும் 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.450 கோடி வருவாய் ஈட்ட வேக்ஃபிட் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்க ரூ.15 கோடி முதலீடு செய்ய வேக்ஃபிட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் ஆறு உற்பத்தி ஆலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
