‘7 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோயிடுச்சு!’... இதுல பாதிக்கு பாதி ‘காரணம்’ இதான்.. அதிர்ச்சி தந்த அறிக்கை!!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் ஊரடங்கு காலத்திற்குள் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளதாக வெளியான புள்ளிவிவரம் அதிரவைத்துள்ளது. இவர்களுள் பெரும்பாலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புள்ளிவிவரக் கணக்கெடுப்பு அலுவலகமான ஓஎன்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் ஊதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 7 லட்சத்து 30 ஆயிரம் குறைந்துள்ளது. அதாவது இத்தனை பேர் வேலையை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மட்டும் 81 ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளதாக கூறும் இந்த புள்ளிவிவரத்தில், ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரம் வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டன் வேலை வாய்ப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சி இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி பேசிய பேசிய பிரிட்டன் ஜூனியர் சுகாதார அமைச்சர் எட்வர்டு ஆர்கர், கொரோனாவால் சுகாதார நெருக்கடியை மட்டுமல்லாது பொருளாதார நெருக்கடியையும் சேர்த்தே சந்திப்போம் என்பது எதிர்பார்த்ததுதான். அதன் ஒரு பகுதிதான் இது என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
