“இதுவரைக்கும் நிறைய பேருக்கு வேலை பறி போயிருக்கலாம்.. ஆனா இனிமேதான் பேரழிவு காத்திருக்கு!”.. கனத்த இதயத்துடன் பிரிட்டன் அதிகாரி!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் ஏராளமானவர்கள் வேலையை இழந்துள்ள நிலையில், மேலும் பலர் வேலையிழக்கும் ஒரு பேரழிவை பிரிட்டன் சந்திக்கவிருப்பதாக சேலன்ஸர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில், கடந்த ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் பிரிட்டன் பொருளாதாரம் 20.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் வரலாற்றில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இதன் பொருள் என்னவெனில் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக பொருளாதார மந்த நிலையை அடைந்து விட்டது என்பது தான் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனிடையே பல்லாயிரக்கணக்கான ஏற்கனவே வேலையை இழந்துவரும் நிலையில் வரும் மாதங்களில் மேலும் பலர் வேலை இழக்கும் பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாக சான்சலர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரடுமுரடான பாதையில் பிரிட்டன் பயணிப்பதாகவும், எதிர்காலத்தில் மிகப் பெரிய முதலீடுகளை செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.