BENGALURU : ‘எங்கப்பா இருக்கு இந்த ஹோட்டல்’.. ஸ்டார் பக்ஸ் இணை நிறுவனரையே வியக்க வைத்த ஃபில்டர் காபி, மசால் தோசை..!! வைரலாகும் ட்வீட்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகின் மிகவும் பிரபலமான காபி நிறுவனங்களில் ஒன்று ஸ்டார் பக்ஸ் காபி நிறுவனம். அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தம்முடைய கிளைகளை விரித்து இருக்கிறது.
சுமார் 80 நாடுகளில் 33 ஆயிரம் கிளைகளுக்கு மேல் செயல்படும் ஸ்டார் பாக்ஸ் காபி ஹவுஸ் நிறுவனத்தின் காபி, பலருக்கும் பிடித்தமானது. பலராலும் விரும்பி உண்ணப்படக்கூடிய இந்த ஸ்டார் பக்ஸ் காபி பல விதங்களாக, பல ஃபிளேவர்களில் வழங்கப்படுகிறது.
ஆனால், இப்பேற்பட்ட காபி நிறுவனத்தின் இணை செயலாளர் தென்னிந்தியாவின் பெங்களூரு வித்தியார்த்தி பவன் உணவகத்தில் சாப்பிட்டு மகிழுந்து அந்த உணவகத்தின் உணவை பாராட்டியுள்ளார் என்பதை நம்ப முடிகிறதா.? ஆம், கர்நாடகாவில் நடைபெறக்கூடிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்டார் பாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் Zev Siegl பெங்களூரு வந்தார்.
அப்போது பெங்களூரில் இருக்கும் பசவனகுடி, காந்தி பஜாரில் இயங்கக்கூடிய பிரபல சவுத் இந்தியன் உணவகமான வித்யார்த்தி பவனுக்கு போயிருக்கிறார். அங்கு சென்ற Zev Siegl உணவாக உரிமையாளர்களின் உபசரிப்பை கண்டு நெகழ்ச்சி அடைந்திருக்கிறார். ஆம், அந்த உணவகத்தில் இருக்க கூடிய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இவருக்கு அமோக வரவேற்பு கொடுத்ததுடன், அந்த ஹோட்டலின் மசாலா தோசை மற்றும் பில்டர் காபியை கொடுத்திருக்கின்றனர். ஸ்டார்பக்ஸ் காபி குடிக்க வேண்டும் என பலரும் விரும்புவதுண்டு. ஆனால் அப்பேற்பட்ட நிறுவன இணை நிறுவனர், இந்த காபியை குடித்துவிட்டு வியந்து போய் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?
அந்த உணவகத்தின் தோசை மற்றும் பில்டர் காபியின் சுவை அருமையாக இருப்பதாக குறிப்பிட்டு, சாப்பிட்டு முடித்த பிறகு, தன் கைப்பட ஒரு லெட்டர் எழுதி கொடுத்து இருக்கிறார். அந்த கடிதத்தில், “நண்பர்களே உங்களுடைய பாரம்பரியமான உணவு தோசை மற்றும் காபி உண்டது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இந்த அழகான அற்புதமான அனுபவத்தை நான் என்னுடன் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்” என்று எழுதியிருக்கிறார். பின்னர் அவர் ஊழியர்களுடன் புகைப்படங்களையும் எடுத்து இருக்கிறார். இந்த கடிதத்தையும், அவருடனான புகைப்படங்களையும் வித்தியார்த்தி பவன் தம்முடைய சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் வெளியிட்டிருக்கிறது.