T20WC: ‘உங்க கையில தான் இருக்கு!’.. இலங்கை ஜெயிக்க வேண்டிக்கொள்ளும் ஆஸி., ரசிகர்கள்.. ! ENGVSL

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By K Sivasankar | Nov 05, 2022 11:51 AM

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

T20 WC Australia fans supports Sri Lanka in ENGvSL

இதில் சூப்பர் குரூப் 1 மாற்றும் குரூப் 2 என இரு குழுவாக பிரிக்கப்பட்டு 12 சுற்றில்,  12 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள இன்னொரு அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டியிருக்கும். இறுதியில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்தாப் அரை இறுதிக்கு முன்னேறும். இதன் ஒரு அங்கமாக, குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து அணி தற்போது அரையிறுதிக்கு  போயிருக்கிறது.

முன்னதாக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதிய ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் மேட்சில் ,ஆப்கான் வீரர்கள் ரசீத் கான் அதிரடியாக 23 பந்துகளில், 3 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்து,  48 ரன்கள் எடுத்தனர். ஆனாலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் ஆஸியிடம் தோல்வியடைந்தது.

இப்படி ஆஸ்திரேலிய அணி த்ரில்லாக ஆடி 4 ரன்களில் வெற்றி பெற்றாலும், நெட் ரன்ரேட்டில் ஆஸி அணி  பின்தங்கி இருக்கிறது. அதாவது தற்போது -0.173 ரன்ரேட்டில் ஆஸ்திரேலியா அணியும், +0.547 ரன்ரேட்டில் இங்கிலாந்து அணியும் உள்ளன.  குறிப்பாக ஆஸி அணியின் அரை இறுதி வாய்ப்பு இப்போது இலங்கை அணியின் கையில் மட்டுமே இருக்கிறது. ஆம், இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி மோதுகின்றன. இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டால், ஆஸி அணி அரையிறுக்கு செல்ல முடியாது.

காரணம் ரன் ரேட்டில் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கும் இங்கிலாந்து இப்போட்டியில் வென்றால், ஆஸ்திரேலியாவை விட ரன் ரேட்டை அடைந்து,  அரையிறுதிக்குச் சென்றுவிடும். மாறாக போட்டியில் இலங்கை வென்றாலும், இலங்கை அணி 4 புள்ளிகளை மட்டுமே வைத்திருப்பதால், அரையிறுதிக்குச் செல்லவும் வாய்ப்பில்லை. எனினும் இலங்கை அடையும் வெற்றி,  ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்ல உதவும்.

எனவே ஆஸி ரசிகர்கள் இன்றைய நிலையில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்வது வாஸ்தவமானதுதானே.? இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு இங்கிலாந்து - இலங்கை அணிகள் ஆஸி மண்ணில் இன்று மோதுகின்றன.

Tags : #T20 WORLD CUP #ENGVSL #T20WORLDCUP 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. T20 WC Australia fans supports Sri Lanka in ENGvSL | Sports News.