'ஓஹோ, ஆர்யன் தப்பே பண்ணல'?... 'அந்த மனுஷன் அப்படி என்ன சொன்னாரு'... ஹிரித்திக்யை கடுமையாக சீண்டிய கங்கனா!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅனைத்து மாஃபியா பப்புவும் ஆர்யன் கானுக்கு ஆதரவாக வருகிறார்கள் என கங்கனா கடுமையாகச் சாடியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட்டைக் கதிகலங்கச் செய்துள்ளது. இந்த கைது சம்பவத்தால் அதிர்ந்துபோன ஷாருக்கானை சல்மான்கான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசேன் கானும், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் ஆர்யன் கானுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவருடைய பதிவில், ''குழந்தையாகவும், பெரியவனாகவும் உன்னை எனக்குத் தெரியும். உன் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களெல்லாம் உனக்கானது. அது உன்னுடைய கிஃப்ட். என்னை நம்பு. இந்த புள்ளிகளையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது அது உனக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கும்.
குழப்பங்களுக்கு இடையில் நீங்கள் உங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அழுத்தத்தை உணரும்போது நீ தேர்ந்தெடுக்கப்படுகிறாய். நீ அதை உணர வேண்டும். கோபம், குழப்பம், உதவியற்ற தன்மை இவை யாவும் உனக்குள் இருக்கும் ஹீரோவை எரித்துவிடும். இருளுக்குள் இருக்கும்போது ஒளியை நம்பு. அது உள்ளுக்குள்ளே இருக்கிறது. இறுதியாக, 'லவ் யூ மேன்' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷனின் பதிவிற்குக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள கங்கனா ராணவத், ''இப்போது அனைத்து மாஃபியா பப்புவும் ஆர்யன் கானுக்கு ஆதரவாக வருகிறார்கள். தவறு செய்ததை மகிமைப்படுத்தக்கூடாது. இந்த சம்பவம் ஆர்யனுக்கு புதிய கோணத்தைக் காட்டியிருக்கும் என நம்புகிறேன். ஒரு செயலினால் ஏற்படும் விளைவுகளை அவருக்கு உணர வைத்திருக்கும்.
இது அவரை சிறந்தவனாகவும் பெரியவனாகவும் மாற்றும். ஒருவர் பாதிக்கப்படும்போது அவர்களைப் பற்றி கிசுகிசுக்காமல் இருப்பது நல்லதுதான், ஆனால் அவர்கள் தவறு செய்யவில்லை என்று உணர வைப்பது குற்றமாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
