'வீட்ல' இருந்து ஹார்பருக்கு 'கார்'ல கிளம்பிய ஆர்யன் கான்...! போலீஸ் 'கண்ட்ரோல்'ல கார் டிரைவர்...! - வாக்குமூலத்தை 'ஆடியோ'வாக பதிவு செய்த சிபிஐ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்யன் கானின் வண்டியை ஓட்டி சென்ற டிரைவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
![driver of Aryan Khan\'s vehicle and recording his confession driver of Aryan Khan\'s vehicle and recording his confession](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/driver-of-aryan-khans-vehicle-and-recording-his-confession.jpg)
மும்பையில் இருந்து கோவாவை நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் முன்னதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் பயணித்தார். கப்பலில் நடந்த மது விருந்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடு இரவில் சோதனை நடத்தியபோது சந்தேகத்தின் அடிப்படையில் ஆரியன் உட்பட ஏழு பேர் கைதாகினர்.
ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படாத போதும் அவருக்கு தற்போது மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் வாட்ஸ்அப்-பில் சந்தேக வார்த்தைகள் மூலமாக சாட் செய்துள்ளதாக என்சிபி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வழக்கு குறித்து என் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்யன் கான் தனது மும்பை வீட்டிலிருந்து துறைமுகத்துக்கு கார் மூலம் சென்று உள்ளார்.
இந்த காரை ஓட்டிய ஓட்டுநரிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை ஆடியோ பதிவு செய்துள்ளனர். இதுபற்றி ஆர்யனுக்கு தொடர்புடைய பலரிடம் அதிகாரிகள் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)