‘இதுதான்யா உண்மையான காதல்’.. காதலிக்கு நடந்த மோசமான விபத்து.. நெட்டிசன்களை உருக வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | May 04, 2022 09:36 PM

கண்ணிவெடியில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்த காதலியை மருத்துவமனையில் காதலர் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Youth married her lover after she lost both legs in landmine blast

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த 2 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்துள்ளனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளுக்கு இடையேயும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கண்ணி வெடியில் சிக்கி கால்களை இழந்த காதலிய கரம் பிடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் லூஹான்ஸ்க் பகுதியைச் சேர்ந்தவர் செவிலியர் ஒக்ஸானா. இவர் தனது காதலர் விக்டருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரமாக இந்த கண்ணி வெடியில் எதிர்பாராத விதமாக ஒக்ஸானா காலை வைத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட வெடி விபத்தில் அவர் தனது இரண்டு கைகளையும் இழந்தார். மேலும் இடது கையில் நான்கு விரல்களும் பறி கொடுத்தார்.

இதனை அடுத்து லிவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் ஒக்ஸானா சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஓரளவுக்கு அவர் உடல்நலம் தேறியுள்ளார். இந்த நிலையில் காதலன் விக்டர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்திலேயே ஒக்ஸானாவை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.

அப்போது ஒக்ஸானாவை குழந்தை போல தூக்கி வைத்துக் கொண்டு விக்டர் நடனம் ஆடினார். மேலும் இருவரும் முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொண்டனர். அப்போது ஒக்ஸானா மகிழ்ச்சியில் கண்கலங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான காதலுக்கு உதாரணம் இதுதான் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

Tags : #UKRAINE #LOVE #MARRIAGE #BLAST #RUSSIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youth married her lover after she lost both legs in landmine blast | World News.