‘7 முறை உயிர் தப்பிய இளைஞர்’.. ‘நீயா’ படம் மாதிரி துரத்தி, துரத்தி பழி வாங்கும் பாம்பு?!.. அதிர வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது இணையை கொன்றதற்காக பெண் பாம்பு ஒன்று இளைஞரை விடாமல் பழி வாங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் எஹ்சான். இவர் அப்பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்போது, இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்த எஹ்சான் அந்த ஜோடியில் ஆண் பாம்பை கொன்று விட்டார். ஆனால் பெண் பாம்பு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
இந்த் நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்தபோது, அந்த பெண் பாம்பு தேடி வந்து இவரை கொத்தியுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் எஹ்சான் அலறியுள்ளார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்து வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் விடாத அந்த பெண் பாம்பு, மறுபடியும் அவரை கடித்துவிட்டது. இப்படியே மொத்தம் 7 முறை அந்த பாம்பு அவரை கொத்தியுள்ளது. அத்தனை முறையும் அக்கம்பக்கத்தினர் தான் இவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். முதலில் சாதாரணமாக கடந்து சென்ற எஹ்சான், 7 முறை பாம்பு தீண்டிய பின்பு தான், பாம்பு ஒன்றை கொன்றது ஞாபகம் வந்துள்ளது.
அதனால் தன்னை பழி வாங்கவே இந்த பாம்பு மீண்டும், மீண்டும் தாக்கி வருவதாக எஹ்சான் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் ‘நீயா’ என்ற திரைப்படம் வெளியானது. அதில் இதேபோல் தான் பாம்பு தேடி வந்து பழி வாங்குவதுபோல் கதை அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
