‘என்ன மீறி உள்ள போய்ருவியா’.. வீட்டு வாசலில் படமெடுத்து நின்ற நல்ல பாம்பு.. உயிரை பணயம் வைத்து உரிமையாளரை காத்த நாய்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 18, 2022 06:57 PM

வீட்டுக்குள் நுழைய இருந்த நல்ல பாம்பை வளர்ப்பு நாய் தடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pet dog saves owner life from poisonous snake in Madurai

மதுரை கோவலன் நகரை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன். இவர் நேற்று மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இவரது வீட்டு வளர்ப்பு நாய் ‘பிங்கி’ நீண்ட நேரமாக குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. எப்போதும் இவ்வளவு நேரமாக குரைத்துக் கொண்டு இருக்காதே என சந்தேகம் அடைந்த வெங்கடகிருஷ்ணன், வீட்டுக்கு வெளியே வந்து பார்த்துள்ளார்.

Pet dog saves owner life from poisonous snake in Madurai

அப்போது சுமார் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று படமெடுத்தபடி நின்று கொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடகிருஷ்ணன், உடனே ஈஷா பாம்பு பிடி நண்பர்களுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த அவர்கள் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

Pet dog saves owner life from poisonous snake in Madurai

இதுகுறித்து தெரிவித்த வெங்கடகிருஷ்ணன், ‘இரவில் எப்போதாவது பாம்பு இங்கு வரும். ஆனால் அதை நாங்கள் அடிக்க மாட்டோம். உடனே ஈஷா பாம்பு பிடி நண்பர்களிடம் தெரிவிப்போம். ஆனால் இன்று பகல் நேரத்திலேயே வீட்டுக்குள் விஷப்பாம்பு நுழைய வந்துள்ளது. இதை தனது உயிரை பணயம் வைத்து பிங்கி எங்களை காப்பாற்றியுள்ளது’ என நாயை கட்டியணைத்து கண் கலங்கினார்.

Tags : #MADURAI #SNAKE #PETDOG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pet dog saves owner life from poisonous snake in Madurai | Tamil Nadu News.