பயத்துக்கே பயம் காட்டுவாரு போலயே..எங்க நிக்குறாருன்னு பாருங்க.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்மலை முகட்டில் நிற்கும் விமானத்தின் இறக்கையில் ஒருவர் கூலாக நடந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இணைய வசதி அதிகரித்துள்ள இந்த காலத்தில், எளிதில் நம்மால் உலகின் அடுத்த பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளைகூட சில நிமிடங்களில் அறிந்துகொள்ள முடிகிறது. அதேபோல, சுவாரஸ்ய சம்பவங்களை வீடியோவாக எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவிடுவோரின் எண்ணிக்கையும் இந்த காலத்தில் அதிகரித்திருக்கின்றன. சொல்லப்போனால், இதுபோன்ற வீடியோக்களை பார்க்க பெரும்பான்மையான மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதனாலேயே இதுபோன்ற சுவாரஸ்ய வீடியோக்கள் மிகக்குறைவான காலத்திலேயே வைரலாகிவிடுகின்றன. அந்த வகையில், தற்போது மலை முகட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விமானத்தின் இறக்கையில் ஒருவர் நடந்து செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குவியும் சுற்றுலாப் பயணிகள்
இந்தோனேஷியாவின் பாலி தீவு, சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. வெண்மணல் கடற்கரை, அடர்ந்த மரங்கள் என புகைப்பட ஆர்வலர்களுக்கு இந்த இடம் விருந்து படைக்க தவறுவதில்லை. கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள மலைகளில் நின்றபடி கடலை ரசிக்க, அங்கே டென்ட் அமைத்து தங்க பெரும்பாலான சுற்றுலாவாசிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படியானவர்களுள் ஒருவர்தான் கோமிங் தர்மாவன்.
தென்மேற்கு பாலி பகுதியில் அமைந்துள்ள உலுவடு என்னும் மலைசார் நிலத்தில் அமைந்துள்ளது. இங்கே மலைமுகடு ஒன்றில் விமானம் ஒன்று சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பு போயிங் விமானமாக பயணங்களை மேற்கொண்டுவந்த இந்த விமானம் தற்போது சுற்றுலாவாசிகளின் ஓய்விடமாக இருந்துவருகிறது.
வைரல் வீடியோ
இந்த விமானத்தில் தான் கோமிங் நடந்து சென்றிருக்கிறார். இது சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதில்,"இந்த வீடியோவை பார்க்கும்போதே எனக்கு கால்கள் நடுங்குகின்றன" என்றும் "அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் தடுமாறியிருப்பேன்" என நெட்டிசன்கள் உற்சாக மிகுதியில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
