777 Charlie Trailer

ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய தமிழக கோவில் யானை 'அகிலா'.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த கியூட் வீடியோ..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 12, 2022 12:11 PM

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Anand Mahindra shares video of elephant celebrating her birthday

திருச்சியில் உள்ள திருவானைக்கா கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இங்குள்ள அகிலா என்னும் யானைக்கு சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்களுக்கு மிகவும் விருப்பமான அகிலாவுக்கு மாலைகள், அணிகலன்கள் ஆகியவை அணிவித்து பழங்கள் உணவாக அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அகிலாவின் பிறந்தநாள் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், பொதுமக்கள் சூழ நிற்கும் அகிலா, தனக்கு வழங்கப்பட்ட உணவுகளை மகிழ்ச்சியுடன் உட்கொள்கிறது. தும்பிக்கையை தூக்கி வாழ்த்து கூறுவது போல செய்துவிட்டு, தனது தலையை பக்கவாட்டில் அசைத்து தனது மகிழ்ச்சியை அந்த யானை வெளிப்படுத்துவதை மக்கள் கண்டு ரசிக்கின்றனர்.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வைரல் வீடியோ

திருவானைக்கா கோவில் யானையான அகிலாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா," இது தமிழ்நாட்டின் திருவானைக்கா கோவில் உள்ள அகிலா என்னும் யானையின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ. தனது தலையை பக்கவாட்டில் அசைத்து தனது மகிழ்ச்சியை அது வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள விரும்பினால் இந்த வீடியோவை பார்க்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரையில் சுமார் 70 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், இந்த யானை குறித்த சுவாரஸ்ய தகவல்களை மக்கள் கமெண்டாக போட்டு வருகின்றனர்.

 

Tags : #ANANDMAHINDRA #ELEPHANT #VIDEO #ஆனந்த்மஹிந்திரா #யானை #வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anand Mahindra shares video of elephant celebrating her birthday | India News.