பந்து பேட்லயே படல.. ஆனாலும் 3 ரன் ஓடிய பேட்ஸ்மேன்கள்.. மாத்தி மாத்தி பந்தை கோட்டைவிட்ட ஃபீல்டர்ஸ்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுயூரோப்பியன் லீக் சீரிஸ் கிரிக்கெட் போட்டி ஒன்றில், பீல்டிங் செய்த வீரர்கள் மாறி மாறி பந்தை பிடிக்க தவறியதால் பேட்ஸ்மேன்கள் 3 ரன்கள் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சர்வதேச போட்டிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதன் காரணமாகவே ஐபிஎல், பிக்பாஷ், கவுண்டி உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்கள் உலகம் முழுவதும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புகழ்பெற்ற European League Series கொஞ்சம் வித்தியாசமான கிரிக்கெட் தொடர் ஆகும். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
குழப்பம்
இந்நிலையில், செக் குடியரசு நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் யூரோப்பியன் லீக் சீரிஸ் கிரிக்கெட் தொடரில் பராகுவே பார்பேரியன்ஸ் அணியும், வினோஹார்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது பராகுவே அணி. அப்போது அந்த அணியின் ஜஹானுர் ஹோக் மற்றும் ஆண்ட்ரூ சிம்ஸ் ஆகியோர் களத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, ரன் எடுக்கும் ஆர்வத்தில் இருவரும் தாறுமாறாக ஓடினர்.
பந்தை சரியாக அடிக்கவில்லை என்றாலும் ரன் எடுக்கும் ஆர்வத்தில் பேட்ஸ்மேன் ஓட, கீப்பர் பந்தை பவுலருக்கு வீசுகிறார். அவர் பந்தை பிடிக்காததால் பேட்ஸ்மேன்கள் இரண்டாவது ரன்னை எடுத்தனர். இதனிடையே, பவுலர் வீசிய பந்தை கீப்பரும் பிடிக்க தவறியதை பயன்படுத்தி மூன்றாவது ரன்னையும் பேட்ஸ்மேன்கள் ஓடி எடுத்தனர். வாய்ப்பிருந்தும், பீல்டிங் செய்த வீரர்கள் பந்தை சரியாக பிடிக்காததால் விக்கெட் எடுக்க தவறினர்.
குலுங்கி குலுங்கி சிரித்த வர்ணனையாளர்கள்
இந்த போட்டிக்கு வர்ணனை செய்துகொண்டிருந்தவர்கள், ரன் எடுக்கும் ஆர்வத்தில் பேட்ஸ்மேன்கள் செய்தவற்றையும், அதனால் பீல்டிங் செய்த அணியினர் தடுமாறியதையும் கண்டு விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
They sneaked in 3️⃣ runs out of nowhere!!🤯😆 @CzechCricket#EuropeanCricketSeries #CricketInCzechRepublic pic.twitter.com/Ld3olDLeuT
— European Cricket (@EuropeanCricket) June 8, 2022