நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் 'அதிரடி'!.. 2 பேர் கைது!.. நடிகை ரியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்!.. அடுத்தது யார்?
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் வழக்கில், போதை மருந்து தடுப்பு பிரிவு (Narcotics Control Bureau) 2 பேரை கைது செய்துள்ளது.

இவ்வழக்கின் முதல் குற்றவாளி நடிகை ரியா சக்ரபோர்த்தி. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பந்த்ரா பகுதியைச் சேர்ந்த அப்துல் பசித் ஆவார். அவருக்கு சாமியூல் மிரண்டா உடன் தொடர்பு இருந்துள்ளது. ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தியின் ஆலோசனைப்படி, சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருட்களை வாங்கித்தந்தவர் தான் சாமியூல் மிரண்டா.
மேலும், சாமியூல் மிரண்டா, சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளராகப் பணியாற்றியவர். இந்நிலையில், சுஷாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள், சாமியூல் மிரண்டா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 35 மணி நேரம் நடிகை ரியாவிடன் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சிபிஐ FIR பதியப்பட்டுள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்த சையித் விலத்ரா என்பவரை போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
