“அதுக்கும் எங்களுக்கும் தொடர்பே கிடையாது!”.. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு கோரி.. நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sivasankar K | Jan 04, 2021 05:19 PM

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ரிலையன்ஸ் குடும்பத்திற்கு எதிராக தொடர்ந்து வன்முறை நடந்து வருவது தொடர்பாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Reliance moves High Court against vandalism of mobile towers

வேளாண் சட்டம், கார்ப்பரேட் விவசாயம் மற்றும் ஒப்பந்த விவசாயம் உள்ளிட்டவற்றுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அந்த நிறுவனம் தங்களுடைய தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளதோடு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் விவசாயம், ஒப்பந்த விவசாயத்தில் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் எண்ணம் ரிலையன்ஸ்க்கு இல்லை என்றும் ஒருபோதும் விவசாய நிலத்தை ரிலையன்ஸ் அந்த மாதிரி நோக்கங்களில் வாங்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ALSO READ: ‘அமேசான் எங்கள அழிக்கப் பாக்குது!’.. வேதனை தெரிவித்து, பேட்டியின்போது பிரபல ரீடெயில் நிறுவனர் கூறிய பகீர் குற்றச்சாட்டு!

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டம் தொடர்பான மசோதாவுக்கு டெல்லியில் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ச்சியாக சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு விதமான கருத்துக்களும் சர்ச்சைகளும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்துவரும் நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளிலுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் கிளைகள் மீது தொடர்ந்து வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில் இதுபற்றி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் குழுமம் மனுதாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரி ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் விவசாயிகள் தொடர்பாக சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட் விவசாயம் மற்றும் ஒப்பந்த விவசாயம் முதலான விஷயங்களுக்கும் தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், இனிமேலும் விவசாய நிலங்களை தாங்கள் வாங்கப் போவதில்லை என்றும், ஒருபோதும் விவசாய நிலத்தை ரிலையன்ஸ் கைப்பற்றவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையிலேயே ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ததாகவும் நீண்டநாள் ஒப்பந்தத்தின் பேரில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யும் முயற்சியில் ஒருபோதும் ரிலையன்ஸ் ஈடுபடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ALSO READ: 'எப்பேற்பட்ட டெக் மில்லியனர்!'.. ‘ரியாலிட்டி ஷோவில் இருந்து நீக்கப்பட்ட பின் நடந்தது என்ன?’.. பரபரப்பை கிளப்பும் தகவல்கள்!

அத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் விவசாயிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளதுடன் காழ்ப்புணர்ச்சி மற்றும் தொழில் போட்டி காரணமாகவே இந்த வன்முறை ரிலையன்ஸ் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Reliance moves High Court against vandalism of mobile towers | India News.