"சேட்டை புடிச்ச ஆளா இருப்பாரு போல..." 'கிரிக்கெட்' போட்டிக்கு நடுவே அட்ராசிட்டி காட்டிய 'முதியவர்'... வைரல் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jan 04, 2021 03:38 PM

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் போல ஆஸ்திரேலியாவில் வைத்து நடத்தப்படும் பிக் பாஷ் லீக் டி 20 தொடர் மிகவும் பிரபலம்.

fan refuse to return ball continues to drink beer video go viral

இந்நிலையில், பிக் பாஷ் லீக் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக ரசிகர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், ஹரிகேன்ஸ் அணி வீரர் டேவிட் மலன் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போது அசத்தலாக அரைசதமடித்த டேவிட் மலன், அடுத்ததாக சிக்ஸர் ஒன்றை பறக்க விட, ரசிகர் ஒருவர் அதனை கேட்ச் செய்ய முயன்றார். ஆனால், பந்து அவரது கையிலிருந்து தவறி அருகிலிருந்த முதியவர் ஒருவரின் பீர் கோப்பையில் சென்று விழுந்தது. அப்போது சிக்ஸ் லைனுக்கு அருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சாம் ரெயின்பேர்டு, அந்த முதியவரிடம் பந்தைக் கேட்டுள்ளார். 

ஆனால், பந்தை கொடுக்க மறுத்த முதியவர், பீர் கோப்பைக்குள் பந்தை வைத்துக் கொண்டே அதில் மீதமிருந்த பீரை குடித்து விட்டு அதன்பிறகு தான் பந்தை திருப்பிக் கொடுத்துள்ளார். சிரித்துக் கொண்டே மிகவும் குறும்புத்தனமாக அந்த முதியவர் செய்த செயல், அங்கிருந்தவர்களிடையே பார்ப்பதற்கு வேடிக்கையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் நெட்டிசன்களிடையே தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fan refuse to return ball continues to drink beer video go viral | Sports News.