'50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் ரெடி'... 'அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்'... அதிரடியாக அறிவித்த அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 29, 2020 12:40 PM

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இதனால் பெற்றோர்கள் மத்தியில் குழந்தைகளின் கல்வி குறித்து கலக்கம் ஏற்பட்டுள்ளது.

Punjab Govt to distribute smartphone to girl students for online class

இந்தசூழ்நிலையில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்று கொடுக்க பல மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவ- மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலாது. இதை கருத்தில் கொண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போகன்கள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளன. கொரோனா காலத்தில் மாணவிகள் ஆன்-லைன் மூலம் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50,000 smartphones ready for distribution, Chief Minister @capt_amarinder Singh tells @IYCPunjab during VC. Says they’ll be given to girl students of govt schools of class XI & XII to facilitate online learning on priority during #COVID19 crisis. pic.twitter.com/wSeKbtnNv7

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Punjab Govt to distribute smartphone to girl students for online class | India News.