"ஹலோ MLA".. தேர்தலில் வெற்றிபெற்ற மனைவி.. ரவீந்திர ஜடேஜா போட்ட நெகிழ்ச்சியான போஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | பெத்த மகனுக்கே ஸ்கெட்ச்.. கரும்பு தோட்டத்தில் இருந்த 6 பேர்.. அப்பா செஞ்ச குலை நடுங்கும் காரியம்..!
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றன. இதில் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதாவும் ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் பாஜக வரலாற்று வெற்றியைப் பெற்று 7 -வது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் பாஜக குஜராத்தில் ஆட்சியமைக்கிறது.
இந்த தேர்தலில் குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ரிபாவா, தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதற்கான பரப்புரையில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ரிபாவா வெற்றிபெற்று சட்ட மன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் ரிவபா ஜடேஜா 84336 வாக்குகள் பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறார். மொத்தமாக ரிபாவா 57 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரிபாவாவிற்கு தனது இன்ஸ்டாகிராம் மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்த பதிவில்,"ஹலோ MLA இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர். ஜாம்நகர் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து மக்களுக்கும் மிக்க நன்றி. ஜாம்நகரின் பணிகள் சிறப்பாக நடைபெற மா ஆஷாபுராவிடம் வேண்டிக்கொள்கிறேன். வாழ்க தேவி" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் MLA குஜராத் என எழுதப்பட்டிருக்கும் சிறிய பரிசு ஒன்றை மனைவிக்கு வழங்கிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ஜடேஜா. இந்நிலையில் இந்த போஸ்ட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | வாயிலேயே விழுந்த பந்து.. பறிபோன 4 பற்கள்.. இலங்கை வீரருக்கு கிரவுண்ட்ல நடந்த சோகம்.. வீடியோ..!

மற்ற செய்திகள்
