காயத்தால் விலகிய ஜடேஜா.. "அவர மாதிரி ஒருத்தரு.." ஆல் ரவுண்டர் பற்றி தோனி சொன்ன வார்த்தைகள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இன்னொரு பக்கம், ஐபிஎல் தொடர்களில் பலம் வாய்ந்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், லீக் சுற்றுடன் வெளியேறவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 59 ஆவது லீக் போட்டியில், இன்று (12.05.2022) சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதி இருந்தது.
சிக்கித் தடுமாறிய சிஎஸ்கே..
இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய சிஎஸ்கே, ஆர்மபத்தில் இருந்தே வேகமாக விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. அதிலிருந்து மீள முடியாத சிஎஸ்கே, 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாக தோனி 36 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி, ஆரம்பத்தில் சற்று சறுக்கலை சந்தித்திருந்தாலும், இளம் வீரர்களான திலக் மற்றும் ஹிரித்திக் ஆகியோர் நிதானமாக ஆடி அணியை மீட்டனர். இதனால், 15 ஆவது ஓவரிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருந்தது.
ஜடேஜா பற்றி பேசிய தோனி..
முன்னதாக இந்த போட்டிக்கான டாஸ் சமயத்தில், ஜடேஜா குறித்து தோனி பேசி இருந்த விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். முன்னதாக, ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் அவர் தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருந்தார்.
அவர் மீதமுள்ள போட்டிகளில் ஆட மாட்டார் என்ற நிலையில், மும்பை போட்டிக்கு முன்பாக அவரை பற்றி பேசி இருந்த தோனி, "கடந்த சில போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தது எங்களுக்கு கை கொடுத்தது. அதே அணியுடன் தான் நாங்கள் ஆடுகிறோம். ஜடேஜாவை போல ஒருவர், வெவ்வேறு வகையிலான அணியைக் களமிறங்க வைக்கும் போது அதிகம் உதவக் கூடியவர். அவரது இடத்தை நிரப்புவது மிக மிக கடினம். அவரது இடத்தில் இன்னொருவர் சிறப்பாக களமிறங்க முடியும் என நினைக்கவே கூடாது. அதற்கு மாற்றே கிடையாது"என தோனி தெரிவித்திருந்தார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால், பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள சிஎஸ்கே, அடுத்த இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
