'மாட்டு சாணத்தில் உருவாக்கப்பட்ட சிப்...' இது யூஸ் பண்ணினா கண்டிப்பா 'அந்த' பாதிப்பை தடுக்கலாம்...! - ராஷ்டிரிய காமதேனு ஆயோக் தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Oct 13, 2020 03:33 PM

மாடுகளில் இருந்து கிடைக்கபெறும் பால் பொருட்களை தவிர்த்து பசு மாட்டுச் சாணம் மற்றும் பசு மாட்டு சிறுநீர் ஆகியவற்றை விற்க ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற புது பிரிவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.

Rashtriya Kamadenu Ayog Cow dung chip prevents radiation

மத்திய அரசு வேளாண் துறையின் கீழ் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற பிரிவை உருவாக்கி அதன் மூலம் பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் பொருட்களை தவிர பசு மாட்டுச் சாணம் மற்றும் பசு மாட்டு சிறுநீர் ஆகியவற்றை விற்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இப்பிரிவின் தலைவராக வல்லாப் கத்திரியா என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கின் தலைவர் வல்லபாய் மாட்டு சாணத்தால் செய்யப்பட்டுள்ள சிப் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சிப்பை குஜராத்தில் இருக்கும் ஒரு பசு மாட்டுப் பண்ணை உருவாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாட்டு சாணத்தால் உருவாக்கப்பட்ட இந்த சிப்பானது செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை குறைக்கும் எனவும் நோய்களை  எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது எனவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கத்திரியா, 'மாடுகளின் சாணமானது நாம் ஒவ்வொருவரையும் காப்பாற்றும். மேலும் செல்போன்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில் இருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். மாட்டுச் சாணத்தால் ஆன இந்த சிப்புக்கு 'கவ்சத்வ கவாச்' என்று பெயரிடப்பட்டுள்ளது' என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும் கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்தில் இருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த சிப்பை பயன்படுத்துங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : #MOBILE #CHIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rashtriya Kamadenu Ayog Cow dung chip prevents radiation | India News.