கறிக்கொழம்புல உப்பு ஜாஸ்தி.. கோவத்தில் எல்லை மீறிய கணவர்.. இளம்பெண்ணின் நிலையை பார்த்து உறைந்துபோன போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தில், கறி குழம்பில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியை கணவர் கடுமையாக தாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கறி குழம்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் இம்ரான் ஷேக். இவருடைய வயது 27. கொத்தனார் வேலை செய்துவரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார் இம்ரான். அப்போது அவருக்கு சப்பாத்தி மற்றும் கறி குழம்பு ஆகியவற்றை பரிமாறியுள்ளார் அவரது மனைவி.
உப்பு அதிகம்
மனைவி பரிமாறிய கறி குழம்பை சாப்பிட்ட இம்ரான், அதில் உப்பு அதிகமாக இருப்பதாக கூறி தனது மனைவியை கடுமையான சொற்களால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் போலீசில் புகார் அளித்துவிடுவேன் என இம்ரானின் மனைவி கூறியுள்ளார். அப்போது கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் இம்ரான் தனது மனைவியை தாக்கியதோடு, அவரது தலை முடியையும் ஷேவ் செய்ததாக தெரிகிறது. இம்ரானின் மனைவி ஏற்படுத்திய சத்தத்தால் ஓடிவந்த அண்டை வீட்டார் இளம்பெண்ணின் நிலையை பார்த்து அதிர்ந்து போயினர்.
புகார், இதனைத் தொடர்ந்து, காவல்துறையில் இதுகுறித்து புகார் அளிக்குமாறு அக்கம் பக்கத்தினர் இம்ரானின் மனைவியிடம் கூறியுள்ளனர். இந்நிலையில், வத்வா பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார்.
புகார்
அதில்,சாப்பாட்டில் உப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் அவர் (இம்ரான்) தன்னை தாக்கியதாகவும், பின்னர் தனது தலை முடியை ஷேவ் செய்ததாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். தனது கணவரின் மீதுள்ள பயம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆன பிறகு காவல்துறையை நாடியதாகவும் இம்ரானின் மனைவி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, துன்புறுத்துதல், வசைச் சொற்களை பிரயோகித்தல் மற்றும் வன்முறை நோக்கத்தோடு தாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் இம்ரானின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாப்பாட்டில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியை தாக்கியதோடு, அவரது தலையை கணவரே ஷேவ் செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8