"இந்த பையனுக்கு ஹெல்ப் பண்ணுங்க".. தனிமையில் பவுலிங் பிராக்டிஸ் செய்த சிறுவன்.. ராஜஸ்தான் CM-க்கு கோரிக்கை வச்ச ராகுல் காந்தி.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனிமையில் பவுலிங் பிராக்டிஸ் செய்யும் சிறுவனின் வீடியோவை பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | காட்டுக்குள்ள விறகு பொறுக்க போன பெண்.. மண்ணுக்குள் பளபளத்த கல்.. ஒரே நாளில் லட்சாதிபதியான சுவாரஸ்யம்..!
இந்தியாவில் சிறுவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களின் பட்டியலில் நிச்சயம் கிரிக்கெட்டும் இருக்கும். சொல்லப்போனால் கிரிக்கெட்டே பலரது சிறுவயது பொழுதுபோக்காக இருந்திருக்கும். கிரிக்கெட்டையே தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க பலரும் நினைத்திருப்பார்கள். அதற்கான அத்தனை திறமையும் இருந்தும், சூழல் காராணமாக பலராலும் அந்த உயரத்தை எட்டிப்பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவை தீபக் ஷர்மா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில்,"ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 16 வயது சிறுவன் அற்புதமான திறமைகளை கொண்டிருக்கிறார். ஒரு சிறிய கிராமத்தில் மீன் வலையில் வலைகளை உருவாக்கி பயிற்சி செய்து வரும் பரத் சிங்கின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்த சிறுவனுக்கு உதவி கிடைத்தால், எதிர்காலத்தில் நம் தேசம் ஒரு சிறந்த பந்து வீச்சாளரைப் பெறக்கூடும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் பரத் சிங் என்னும் சிறுவன் தனியாளாக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுகிறார். மீன்பிடி வலைகளை உபயோகிக்கும் பரத், அதிவேகமாக பந்துவீசி ஸ்டம்பை சிதறடிக்கிறார். இதுவரையில் இந்த வீடியோவை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.
உதவி செய்யுங்கள்
இந்நிலையில், இந்த வீடியோ ராகுல் காந்தியையும் பாதித்திருக்கிறது. இதனை பகிர்ந்துள்ள அவர் சிறுவனுக்கு உதவி செய்யும்படி ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கோரிக்கையும் வைத்திருக்கிறார். இந்த பதிவில் அவர்,"நம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அற்புதமான திறமைகள் ஒளிந்துள்ளன. அவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது நமது கடமை. அசோக் கெலாட் அவர்களே இந்த சிறுவனின் கனவை நனவாக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து நிச்சயம் அந்த சிறுவனுக்கு உதவுவதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருக்கிறார். இதனிடையே இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
हमारे देश के कोने-कोने में अद्भुत प्रतिभा छिपी हुई है, जिसे पहचानना और बढ़ावा देना हमारा कर्तव्य है।@ashokgehlot51 जी से मेरा निवेदन है, इस बच्चे का सपना साकार करने के लिए कृपया उसकी सहायता करें। https://t.co/vlEKd8UkmS
— Rahul Gandhi (@RahulGandhi) July 27, 2022