பணக்கார பொண்ணுங்க கூட டேட்டிங் போலாம்.. 76 வயது தாத்தாவுக்கு வந்த ஆசை.. தெரியாம போய் வசமா சிக்கிட்டேனே!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனே: 76 வயது முதியவர் ஒருவர் பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசமாக இருக்கலாம் என எண்ணி ரூ.60 லட்சம் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் வசிக்கும் 76 வயது முதியவர் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 'கடந்த ஆண்டு செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்தது. 'பிரெண்ட்ஷிப் கிளப்' பெயரிலான விளம்பர செய்தியில், போன் நம்பரும் இருந்தது.
வசதி படைத்த பணக்கார பெண்களுடன் டேட்டிங்:
அதனை தொடர்பு கொண்டு நான் பேசினேன். அப்போது, அதிக வசதி படைத்த பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று பதிலுக்கு பணம் ஈட்டலாம் என சொன்னார்கள். அதனை தான் நான் நம்பி ஏமாந்தேன்' எனக் கூறியுள்ளார்.
பாதுகாப்புக்காக முன் வைப்பு தொகை:
அதுமட்டுமில்லாமல், கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை சுமார் ரூ.60 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதில், உறுப்பினர் கட்டணம், பாதுகாப்புக்காக முன் வைப்பு தொகை உள்ளிட்ட பிற விசயங்களுக்காக குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு முதியவர் பணம் அனுப்பியுள்ளார்.
28 வயது பெண் கைது:
இதன் பின்னரே இந்த குழு மோசடி என அறிந்து போலீசை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 28 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் வங்கி கணக்கே பணபரிமாற்றத்திற்கு பயன்பத்தி உள்ளனர். விசாரணையில், அந்தப்பெண் அனூப் மனோர் (வயது 35). மேலும், அவரை வரும் 22-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் வேறு சிலரும் ஈடுபட்டு இருக்க கூடும் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
