'டீ' குடிக்கலாம்ன்னு 'ஆட்டோ'வ நிறுத்துன டிரைவர்... பின் 'சீட்டு'ல கிடந்த 'பை', அதுக்குள்ள,,. அடுத்த கணமே ஆட்டோ 'டிரைவர்' செய்த நெகிழ வைக்கும் 'செயல்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனேவில் அமைந்துள்ள கேசவ் நகர் பகுதியில் இருந்து தம்பதியர்கள் இருவர், வித்தல் மபரே (vitthal mapare) என்பவரின் ஆட்டோவில் ஏறி, ஹதப்சர் (hadapsar) பேருந்து நிலையம் அருகே இறங்கியுள்ளனர்.

அப்போது, அவர்கள் தங்களிடம் இருந்து பை ஒன்றை ஆட்டோவில் விட்டு விட்டுச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த ஆட்டோ டிரைவர் சிறிது தூரம் சென்ற பின்னர், டீ குடிக்க வேண்டி ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் சீட்டில் பை ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். அந்த பையைத் திறந்து கூட பார்க்காத அந்த டிரைவர், அதனை நேராக போலீஸ் நிலையம் சென்று ஒப்படைத்துள்ளார்.
அதனை போலீசார் திறந்து பார்த்த போது, அதனுள் சுமார் 100 கிராம் தங்க நகைகளும், 20,000 ரூபாய் பணம் என மொத்தமாக 7 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளது. முன்னதாக, ஹதப்சர் பகுதி போலீஸ் நிலையத்தில் ஆட்டோவில் சென்ற அந்த தம்பதியர், தங்களது பை காணாமல் போனது தொடர்பாக புகாரளித்துள்ளனர். பின்னர், அந்த பை அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
60 வயதான ஆட்டோ டிரைவர் மபரே, பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். ஊரடங்கு காலத்தில் மிகவும் இக்கட்டான காலகட்டங்களிலும் அந்த பையை தனதாக்கி கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைக்க நினைத்த ஆட்டோ டிரைவருக்கு பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மற்ற செய்திகள்
