Michael Coffee house

பாவமா இருக்குங்க...! ஏன் இப்படி கஷ்டப்படுறாரு...? 'பேசாம போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல...' - தோனி குறித்து லெஜண்டரி பேட்ஸ்மேன் ஆதங்கம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Apr 21, 2021 11:22 AM

தோனியின் பேட்டிங் குறித்து கடந்த சில வருடங்களாக கடுமையான விமர்சனங்களும், கிண்டல்களும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் லெஜெண்டரி பேட்ஸ்மேன் பிரையன் லாரா, தோனி பேசாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

west indies legend Brian Lara says ms Dhoni may rest

சர்வதேச கிரிக்கெட் எதிலும் ஆடாமல் ஆடாமல், வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே தோனி விளையாடி வருகிறார், தனது விக்கெட் கீப்பிங் சிரமங்களுக்கு ஏற்றவாறு பவுலிங்கில் சில மாற்றங்கள் செய்கிறார்.

west indies legend Brian Lara says ms Dhoni may rest

சமீபத்தில் அவர் கூறும்போது,  தன் பேட்டிங் திறனுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்க முடியாது.. 24 வயதிலேயே சிறப்பாக ஆடுவதற்கான உத்தரவாதம் எல்லாம் கொடுக்க முடியாது 40 வயதிலா தர முடியும் என பேசினார்.

இந்தநிலையில் லாரா இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், அதில்,

டோனி கைகளில் கிளவ்ஸ் மாட்டிக் கொண்டு கேட்ச்களை பிடிக்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் கேப்டன்ஷிப் செய்ய வேண்டியிருக்கிறது. ஸ்டம்பிங்கும் செய்ய வேண்டும். சென்னை அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பேட்ஸ்மேன் ஆர்டரின் நீளம் அதிகம், இப்படி இருக்கும் சூழலில் தோனி எதற்கு சிரமப்பட வேண்டும், என்னைக் கேட்டால் அவர் பேசாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

west indies legend Brian Lara says ms Dhoni may rest

 சிஎஸ்கே அணியில் நிறைய நல்ல வீரர்கள் இருக்கின்றனர். உதராணமாக சாம் கரண். அவர்வேற லெவல் பார்மில் இருக்கிறார். தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடி பின்னி பெடலெடுக்கிறார்.

west indies legend Brian Lara says ms Dhoni may rest

தோனி பிற வீரர்களிடமிருந்து திறமையை வெளிக்கொண்டு வந்தால் மட்டுமே போதுமானது. அப்படி செய்தால் இந்த முறை கோப்பையை எளிதில் சிஎஸ்கே ஜெயித்து விடும்.

இவ்வாறு பிரையன் லாரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. West indies legend Brian Lara says ms Dhoni may rest | Sports News.