'இருக்குற இடம் தெரியாம... இருந்துட்டு போயிடலாம்னு பாத்தா... விட மாட்றாங்களே'!.. தொடர்ந்து சொதப்பல் ஆட்டம்!!.. வசமாக சிக்கிய சிஎஸ்கே பவுலர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் மூன்று போட்டிகளிலும் நன்றாக ஆடாமல் பவுலர் ஒருவர் சொதப்பி வருவது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
சென்னைக்கும் கொல்கத்தாவிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெறுகிறது. மும்பை வான்கடேவில் இந்த போட்டி நடக்க உள்ளது. மூன்று போட்டிகளில் இதுவரை இரண்டில் தோல்வி அடைந்து கொல்கத்தா பின்னடைவை சந்தித்துள்ளது.
மூன்றில் 2 போட்டிகளில் வென்றுள்ள சிஎஸ்கே புதிய அவதாரம் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியில் தற்போது பவுலர்கள் பலரும் ஃபார்மிற்கு வந்துவிட்டாலும், ஷரத்துல் தாக்கூர் மட்டும் ஃபார்மிற்கு வரவில்லை. முதல் போட்டியில் மோசமாக பவுலிங் செய்த சஹார் அதற்கு அடுத்த போட்டியிலேயே ஃபார்மிற்கு திரும்பினார். அந்த மேட்சில் பஞ்சாப்பிற்கு எதிராக 4 விக்கெட்டுகளை சாகர் எடுத்து அசத்தினார்.
ஆனால், ஷர்துல் தாகூர் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. முதல் போட்டியில் ஒரு விக்கெட் எடுத்த ஷர்துல் அதன்பின் விக்கெட்டும் எடுக்கவில்லை. எப்போதும் இவர் ரன் கொடுப்பது வழக்கம்தான் என்றாலும் விக்கெட் எடுத்து கொடுப்பார்.
கடந்த 2 போட்டிகளாக இவர் விக்கெட் எடுக்கவில்லை. இதனால் ஷர்துலை அணியில் எடுக்க கூடாது, அவருக்கு மேலும் வாய்ப்பு வழங்க கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு வேறு வீரரை களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஷர்துல் தாகூருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க சிஎஸ்கே கோச் ஃபிளமிங் முடிவு செய்துள்ளார். 'ஷர்துல் ஆடட்டும், அவர் ஃபார்மிற்கு திரும்பட்டும். இப்போது நீக்க வேண்டாம்' என்ற முடிவில் பிளமிங் மற்றும் தோனி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இவர் நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர். இவர் அணியில் இருந்தால் கூடுதல் பேட்டிங் ஆப்ஷன் இருக்கும். இதனால் ஷர்துல் தாகூரை நீக்கும் எண்ணம் சிஎஸ்கேவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது.