யாரு இப்படி பண்றாங்கன்னே தெரியல...! 'ஒவ்வொரு அமாவாசைக்கும் வீட்டு வாசல்ல திறந்தா இப்படி இருக்கு...' - அச்சத்தில் உறைந்த ஊர்மக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொன்பாடி சோதனைச்சாவடி அருகில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர்கள் தக்ஷிணாமூர்த்தி மற்றும் அவரின் மனைவி பொன்னியம்மாள். இவர்களுக்கு சுஜாதா, பொற்கொடி என்று இரு மகள்களும், வினோத் குமார் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாவாசை நாள் அன்று தட்சிணாமூர்த்தி அவர்களின் வீட்டு வாசலில் மந்திரிகத்தில் பயன்படுத்தப்படுவது போல, படங்கள் வரைந்து, மஞ்சள் குங்குமம் இட்டு மந்திரித்த முட்டை இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தட்சிணாமூர்த்தி, இதேப்போல ஒவ்வொரு அம்மாவாசை நாள் அன்றும் வீட்டு வாசலில் மந்திரித்த முட்டை இருந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
இம்மாதிரி வீட்டு வாசலில் காணப்பட்ட நாள்முதல், தட்சணாமூர்த்தியின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்பு மந்திரித்து வைக்கப்பட்ட முட்டையை தொட்ட தட்சிணாமூர்த்தியின் மூத்த மகள் சுஜாதா உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறுகின்றனர்.
இதற்கு காரணம் அதற்குமுன்பு வரை, எந்த ஒரு நோய் நோடியும் இல்லாத இளம் பெண் சுஜாதா, எப்படி திடீரென உயிரிழந்திருக்க முடியும் இதற்கு காரணம் யாரோ மந்திரித்து வைத்த முட்டை தான் என அப்பகுதி மக்களும் நம்புகின்றனர்.
இந்த மாதிரியான சம்பவங்கள் தட்சிணாமூர்த்தி வீட்டில் மட்டுமல்லாது, அதே ஊரை சேர்ந்த இன்னும் சிலரின் வீட்டு வாசல்களிலும் மாந்திரீக முட்டை இருந்ததாகவும், அதேபோல் அவர்களின் வீடுகளில் இருப்பவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடுமையான இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இம்மதிரியான சம்பவங்கள் நடக்கும் இந்த ஊரில் வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என மாந்திரீக சம்பவத்தில் பலியான சுஜாதாவின் தந்தை தக்ஷிணாமூர்த்தி கனத்த மனதுடன் கூறியுள்ளார்.
அப்பகுதி மக்களும் மாந்திரீக முட்டைகளை வீட்டு வாசலில் வீசி செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த வித ஆதாரமும் இல்லாமல் புகார் குறித்து காவல்துறையினர் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.