'பிரியங்கா சோப்ராவா?'.. 'பிரியங்கா காந்தியா?'.. ‘அய்யோ பாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!’.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 02, 2019 01:52 PM
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் எம்.எல்.ஏ சுரேந்தர் குமார் என்பவரும், அவருடன் டெல்லி பிரிவின் தலைவர் சுபாஷ் சோப்ராவும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய சுரேந்தர் குமார், சோனியா ஜிந்தாபாத், காங்கிரஸ் கட்சி ஜிந்தாபாத் என்று கோஷக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். ஆனால் இதற்கு அடுத்தபடியாக அவர் எழுப்பவேண்டியிருந்த கோஷக் குரல், பிரியங்கா வதேரா ஜிந்தாபாத் என்பதுதான். எனினும் அவர் தன்னிலை மறந்து தவறுதலாக, ‘பிரியங்கா வதேரா ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்புவதற்கு பதிலாக ‘பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்’ என்று குரலெழுப்பியதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய கோஷத்தை அடுத்து, உடனே அவரது தவறு சுட்டிக் காட்டப்பட்டது.
இதனையடுத்து சுரேந்தர் குமார், தாம் அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்டதோடு, மீண்டும் ‘பிரியங்கா ஜிந்தாபாத்’ என்று சரியாகக் கோஷம் எழுப்பினார். எனினும் இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு, ‘பிரியங்கா சோப்ரா எப்போது காங்கிரஸில் சேர்ந்தார்?’, ‘நல்ல வேளை கூட்டத்தில் ராகுல் கலந்துகொண்டிருந்தால் ராகுல் பஜாஜ் ஜிந்தாபாத் என குரல் எழுப்பி இருப்பார் சுரேந்தர் குமார்’ என்றெல்லாம் கமெண்டுகள் வந்தவண்ணம் உள்ளன.