நெற்றியில் பொருத்தப்படும் 'மூன்றாவது கண்'...! இது முக்கியமா 'அவங்களுக்கு' தான் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்...! - இதுக்குள்ள இருக்குற 'சென்சார்' என்ன பண்ணும் தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்எந்த நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடப்பவர்களுக்கு மூன்றாவது கண் என்ற புதிய கருவியை தென்கொரியாவை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனா வைரஸினால் பல நாடுகள் செயலிழந்து போயுள்ளன. இந்தியாவும் கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. ஏற்கனவே செல்போனில் மூழ்கி கிடந்தவர்களுக்கு கொரோனா மேலும் தீனி போட்டுள்ளது எனலாம்.
செல்போனுக்கு அடிமையானவர்கள் சாலைகளில் செல்லும் போது கூட மொபைலில் இருந்து கண்ணை விலகாமல் செல்வதால் விபத்துகளும் நடக்கின்றன. இதற்காக தென் கொரியாவை சேர்ந்த பான்பின் ஹூக் என்பவர் ஒரு வியக்க வைக்கும் கருவியை உருவாக்கியுள்ளார்.
இரு கண்களுக்கும் மேல் நெற்றியின் நடுவில் பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவியின் பெயர் மூன்றாவது கண். இந்த கருவி 2 மீட்டருக்கும் வரவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கும் வகையில் உள்ளது. 2 மீட்டர் தொலைவிற்குள் ஆபத்து வந்தால் எச்சரிப்பதற்காக 'கைரோ' என்ற சென்சார் இதனுள் பொருத்தப்பட்டுள்ளது.
செல்போனிற்கு அடிமையானவர்களுக்கு இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மூன்றாவது கண்ணை உருவாக்கிய பான்பின் ஹூக் தெரிவித்துள்ளார்.
உலகம் எங்கிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மனிதர்கள் பலர் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை கண்டறிந்து அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் தென்கொரிய நபரின் 'மூன்றாவது கண்' கருவி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.