வரலாற்றில் முதன்முறையாக நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்றுகிறதா பாஜக? ஆனா அதுக்கு அந்த விஷயம் நடக்கணுமே..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
"என் போட்டாவ மார்ஃபிங் செஞ்சிருக்காங்க"..சச்சின் பரபரப்பு புகார்..என்ன நடந்துச்சு..?
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் திமுக அபார வெற்றி பெற்றிருந்தது.
மொத்தமுள்ள, 21 மாநகராட்சிகளையும் ஆளும் திமுக கைப்பற்றி இருக்கும் நிலையில், நாகர்கோவிலில் புதிய சிக்கல் ஒன்றினை திமுக சந்தித்துவருகிறது.
யார் யாருக்கு எத்தனை வார்டுகள்?
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக 24 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகளான காங் 07, மதிமுக 1 இடங்களையும் கைப்பற்றி மொத்தம் 30 இடங்களை பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜக 11வார்டுகளிலும் அதிமுக 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. சுயேட்சையாக வெற்றிபெற்ற இரண்டு வேட்பாளர்களும் ஏற்கனவே பாஜக அதிருப்தியில் இருப்பவர்கள். அதிமுகவுடன் பாஜக இணக்கமான சூழ்நிலையில் இருந்து வருவதால் நாகர்கோவில் மேயர் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
என்ன சிக்கல்?
முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜனின் சகோதரரும், முன்னாள் நாகர்கோவில் நகராட்சி துணை தலைவருமான சைமன், துணை மேயர் பதவியை அவரது மனைவிக்கு கொடுக்கவேண்டும் என கட்சி மேலிடத்தில் கோரிக்கை வைத்துள்ளார். அதே வேளையில், துணை மேயர் பதவியை தங்களுக்கு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கறாராக சொல்லியிருக்கிறது.
துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படாத பட்சத்தில், காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற 7 உறுப்பினர்களும் நடைபெற இருக்கும் மேயர், துணை மேயர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு கொடுப்பார்களா? என்ற அச்சம் நிலவுவதாக தெரிகிறது.
மறைமுக தேர்தல்
மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் மறைமுக தேர்தல் என்பதால் யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. 1 மதிமுக ஆதரவு மற்றும் 24 திமுக உறுப்பினர்களை சேர்த்து மொத்தம் 25 இடங்கள் ஏற்கனவே உறுதியாகியுள்ளது ஆளும் தரப்பில் பலமாக அமைந்துள்ளது. எதிர் தரப்பில் பாஜக 11, அதிமுக 7 மற்றும் சுயேட்சைகள் 2 என மொத்தம் 20 உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே, நடைபெற இருக்கும் மறைமுக தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் எடுக்கும் முடிவே யார் நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்றுவார்கள் என்ற கேள்விக்கு பதிலாகவும் அமையும்.
சமரசம்
மேயர் பதவியை கைப்பற்றும் நோக்கத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை வைத்து காங்கிரஸ் உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக ஒரு மேயர் பதவியையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாகவும் அதற்கான பணிகளை முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுவருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக, நாகர்கோவிலை பொறுத்தவரையில் மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்றப்போவது யார் என்பதை காங்கிரஸ் கட்சியின் 7 உறுப்பினர்களே முடிவு செய்ய இருப்பதால் நாகர்கோவில் மேயர் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.