நிலத்தடி'ல இருந்து 60 வருசமா புகையும் தீ.. "அந்த ஊருக்கு போக்குவரத்தையும் கட் பண்ணிட்டாங்க".. திகிலை உண்டு பண்ணும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது உலகத்தின் பல இடங்களில் உள்ள பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள மர்மம் தொடர்பான செய்தி, இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்யும்.
அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் Pennsylvania-வை அடுத்த Centralia என்னும் பகுதியில், மக்கள் யாருமே வசிக்காத நிலையில், இது தொடர்பான செய்தி தான் அதிகம் வைரலாகி வருகிறது.
இந்த நகரம், அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. முன்பு ஒரு காலத்தில், இந்த பகுதி முழுவதும் கனிம பொருட்கள் மற்றும் உலோகங்கள் உள்ளிட்ட பொருட்களை நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கும் சுரங்கம் நிறைந்த இடமாக இருந்துள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த 1962 ஆம் ஆண்டு, அரங்கேறிய சம்பவம் ஒன்று அந்த பகுதியை முற்றிலுமாக மாற்றி விட்டது. குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ, வேகமாக அப்பகுதி முழுவதும் பரவி, பூமியின் நிலப்பரப்புக்கு அடியில் இருந்த நிலக்கரி சுரங்கத்திலும் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த தீயை அணைத்தாலும், சுரங்க பகுதிகளில் இருந்தும் வரும் தீ, தொடர்ந்து 60 ஆண்டுகளாக எரிந்து கொண்டே இருப்பது தான், அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
Centralia-வின் நிலத்தடியில் இருந்து கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து தீ எரிந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை அணைப்பதற்காக பல முறை முயற்சிகள் மேற்கொண்ட போதும், அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. இது தவிர, நிலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலில் இருந்து, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட விஷ வாயுக்கள் வெளியேறி வருவதால், வாழ்வதற்கு ஆபத்தான இடமாகவும் இப்பகுதி மாறி உள்ளது.
முன்னதாக, நிலப் பகுதியில் இருந்து தீ எரிய ஆரம்பித்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1982ஆம் ஆண்டில், தனது வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன், அங்கிருந்த குழி ஒன்றில் விழுந்ததாகவும், அவரை சகோதரர் ஒருவர் காப்பாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அங்கு வாழ்வது ஆபத்தானது என்பதை உணர்ந்துள்ளனர்.
பின்னர், 1983 ஆம் ஆண்டு, அரசு தலையிட்டு பெரும்பாலான மக்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு குடிபெயர செய்தது. இதனால், பல வீடுகளை தரை மட்டமாக்கவும் செய்தனர். தற்போது யாரும் இங்கே இல்லாத நிலையில், ஐந்து குடியிருப்பாளர்கள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கார்பன் மோனாக்சைடு வெளியாகும் அளவு தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும், இந்த ஐந்து குடும்பங்கள் சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்று அங்கேயே தங்கி இருக்கின்றனர்.
2022 ஆம் ஆண்டின் படி, Centralia பகுதி உள்ளூர் போக்குவரத்துடன் இணைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே போல, ஒரு பேய் நகரமாக Centralia மாறி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.