'கொரோனா பரவலை தடுக்க'... ‘கோயிலில் சாமி முன்பு’... ‘இளைஞர் செய்த உறைய வைக்கும் காரியம்’... ‘அதிர்ந்துப்போன கோயில் அர்ச்சகர்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 19, 2020 08:39 PM

நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, அம்மனுக்கு தனது நாக்கை அறுத்து இளைஞர் ஒருவர் காணிக்கையாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Chops Off \'Tongue\' To \'Stop\' Coronavirus Spread in Gujarat

மத்தியப்பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான விவேக் சர்மா என்பவர், காளியின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இவரும், இவருடைய தம்பி ஷிவம் உள்பட 8 பேர் குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பவானி மாதா கோயிலை புதுப்பிக்கும் பணியில் சிற்பப் பணியில் கடந்த 2 மாதங்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நேற்று கடைக்கு செல்வதாக இளைஞர் விவேக் சர்மா தனது தம்பி உள்பட அனைவரிடமும் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் கடைக்கு செல்லாமல், அங்குள்ள நாதேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்ற அவர்,  அங்கு நாக்கு அறுவட்ட நிலையில், கையில் நாக்குடன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். சிறிது நேரத்தில், அங்கு வந்த கோயில் அர்ச்சகர் இதனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துப் போனார். பின்பு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து இளைஞர் விவேக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையில் கடைக்கு சென்ற அண்ணன் வெகுநேரமாகியும் திரும்பாததால், அவரது தம்பி ஷிவம் தனது அண்ணனுக்கு ஃபோன் செய்துள்ளார். அப்போது ஃபோனை எடுத்த வேறு நபர் ஒருவர், நாக்கு அறுபட்ட விஷயத்தை கூறியதைக் கேட்டதும் அவரது தம்பி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தீராத பக்தி கொண்ட இளைஞர் விவேக், கடந்த 5 நாட்களாக தனது ஊருக்கு செல்ல முற்பட்டதும், ஆனால் ஊரடங்கு உத்தரவால் செல்ல முடியாததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்தான் அவர், ‘ஊரடங்கு நீங்கி மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதால் அவர் நாக்கை அறுத்து, அம்மனுக்கு காணிக்கையாக்கியது’ தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது நாக்கை மீண்டும் இளைஞர் விவேக்கிற்கு ஒட்டுவதற்காக, மருத்துவர்கள் முயற்சி எடுத்துவரும் நிலையில், முழு விசாரணைக்குப் பின்னரே இதுகுறித்து தகவல் கூற முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர்.