“பிரார்த்திக்கிறேன்!” - நிவர் புயல் தொடர்பாக தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி!
முகப்பு > செய்திகள் > உலகம்நிவர் புயலால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ள, “பிரதமர் நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர், உடன் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் @EPSTamilNadu, புதுச்சேரி முதல்வர் @VNarayanasami உடன் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) November 24, 2020
மணிக்கு 5 கி.மீ வேகத்தில் சென்னைக்கு அருகே வந்திருக்கும் நிவர் புயல் கரையைக் கடப்பதை அடுத்து, மத்திய மாநில அரசுகள் தமிழகத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பிரதமரின் இந்த ட்வீட் கவனம் பெற்றுள்ளது.