"இந்தியாவின் அனைத்து குடும்பங்களிலும் அவரது பெயர் ஒரு அங்கம்!".. பாடும் நிலா எஸ்.பி.பி மறைவுக்கு... பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது என ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உடல்நிலை மீண்டும் திடீரென்று நேற்று மோசம் அடைந்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற்று மீண்டு வருவார் என ரசிகர்கள், திரையுலகினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், பேரிடியாக அவரது மறைவு செய்தி வந்தது". இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு செய்தி, அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது. குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.
With the unfortunate demise of Shri SP Balasubrahmanyam, our cultural world is a lot poorer. A household name across India, his melodious voice and music enthralled audiences for decades. In this hour of grief, my thoughts are with his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 25, 2020
மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.