தந்தை இறந்த நேரத்தில்.. பிரதமர் மோடி செஞ்சது என்ன?.. நினைவுகூர்ந்த VHP தலைவர்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரான ஹீராபென், 100 ஆவது வயதில் கடந்த ஒரு சில தினங்களுக்கு காலமானார். தாயார் மறைவுக்காக டெல்லியில் இருந்து வட்நகருக்கு வந்த மோடி, தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார்.

தொடர்ந்து ஹீராபெனின் இறுதி சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு மீண்டும் தனது பணிக்கு திரும்பி இருந்தார் பிரதமர் மோடி.
மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் நாட்டின் 7 ஆவது வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கியும் வைத்திருந்தார் மோடி. தாயார் இறந்த பிறகு, உடனடியாக பிரதமர் பணிக்கும் அவர் திரும்பி இருந்தது, பலரையும் ஆச்சரியப்பட வைத்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் தந்தை காலமான சமயத்தில் அவரது செயல்பாடு குறித்து விஎச்பி பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.
இது குறித்து பேசும் திலீப், "குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1989 ஆம் ஆண்டு பாஜகவின் முக்கிய கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் மோடியின் தந்தை தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி இறந்துவிட்டார் என்று எங்களுக்கு தகவல் வந்தது. அதன் பிறகு அவர் உடனடியாக வட்நகர் சென்றார். அதன் பிறகு அவர் கட்சி கூட்டத்திற்கு வரமாட்டார் என்று தான் நாங்கள் எல்லோரும் நினைத்தோம். ஆனால் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு பிற்பகல் கட்சிக் கூட்டத்துக்கு மோடி வந்துவிட்டார். அவரை பார்த்து கூட்டத்திலிருந்து அனைவரும் ஆச்சரியப்பட்டோம். கட்சி கூட்டம் முடிந்த பிறகு தந்தை இறந்த சூழலில் கூட்டத்துக்கு வந்து பற்றி மோடியிடம் நான் பேசினேன்.
அதற்கு அவர், 'தந்தையின் இறுதிச்சடங்கு செய்ய வேண்டியது கடமை. அது போல கட்சியில் எனது பொறுப்புகளை முழுமையாக செய்ய வேண்டியதும் என் கடமை' என அவர் சொன்ன வார்த்தைகள் எங்களுக்கு கட்சித் தொண்டர்களுக்கும் ஊக்கமளிக்கும் தருணமாக அமைந்தது. நமது பொறுப்புகள், கடமைகளை செய்வதற்கு அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும் என்பதை கற்றுக் கொண்டோம்" என மோடியின் உணர்வு பற்றி திலீப் நெகிழ்ந்த படி நினைவு கூர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்
