பிப்ரவரி 14-ல் பசு அரவணைப்பு தினம்.. வாபஸ் பெற்றது இந்திய விலங்குகள் நல வாரியம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாபசு அரவணைப்பு தினம் குறித்து வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக இந்திய விலங்கள் நல வாரியம் அறிவித்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.
பொதுவாக பிப்ரவரி 14 ஆம் தேதி என்றால் பலருக்கு காதலர் தினம் தான் ஞாபகத்திற்கு வரும். அது தொடர்பான விஷயங்களும் சமூக வலை தளங்களில் வைரலாகும். இந்த சூழ்நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் பிப்ரவரி 14 ஆம் தேதி பசு அரவணைப்பு தினம் கொண்டாட விலங்குகள் நல வாரியம் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
மேலும், இந்திய கலாசாரம், கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு விளங்குவதாகவும் மேற்கத்திய கலாசார தாக்கத்தால் வேத மரபுகள் சில அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், "பசுவினை நாம் அரவணைப்பதால் நல்ல உணர்வும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். ஆகவே, பசுக்களை விரும்பும் அனைவரும் பசு நம்முடைய வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறை எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியை கருத்தில்கொண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி பசு அரவணைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இதனை தொடர்ந்து, பிப்ரவரி 14 ஆம் தேதி பசு அரவணைப்பு கொண்டாடுவது குறித்து தேசிய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிவிப்பு குறித்து இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தனது அறிக்கையை வாபஸ் பெறுவதாக விலங்குகள் நல வாரியம் தெரிவித்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் டிகே தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினத்தை கொண்டாட இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
