ஊரே ஒண்ணு கூடி மண்ணுக்கடியில எதையோ தேடுறாங்களே...! 'ஓ அது தான் விஷயமா...' - வைரலான வீடியோ குறித்து ஸ்பாட்ல ஆய்வு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தின் வச்சிங்கை அடுத்த வாஞ்சிங் கிராமத்தில் மண்ணிற்கு அடியில் இருந்து வைரக்கற்கள் கிடைப்பதாக தகவல்கள் பரவின. மேலும், வைரக்கற்கள் எடுப்பதுபோன்ற போட்டோக்கள் வைரலாகின.

மேலும் மக்கள் நிலத்தைத் தோண்டும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதில் மண்ணிற்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் காட்டப்பட்ட சிறிய துண்டுகளாக மிளிரும் கற்களின் படங்களும் இணையத்தில் பரவியது. இந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாகாலாந்தின் சுரங்க இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வச்சிங் பகுதியில் விலைமதிப்பற்ற தாதுக்கள் வைர கற்கள் கண்டெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து, குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், புவியியலாளர்களான அபெந்துங் லோதா, லாங்க்ரிகாபா, கென்யெலோ ரெங்மா மற்றும் டேவிட் லூபெனி ஆகியோர் அடங்கிய குழு வாஞ்சிங் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
