“இந்த ஏரியாவுல வசிக்கும் குடும்பத்துல ஒருத்தருக்கு தலா ஒரு ஸ்மார்ட்போன்!”.. ‘மாநில’ முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியில், வசிக்கும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

malkangiri மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை காணொளி வாயிலாக திறந்துவைத்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், நிகழ்வுக்கு பின்னர் சிற்றுரை ஆற்றினார். அவரது அந்த உரையில், பல்வேறு எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
அதன்படி, அப்பகுதியில் ஏற்கனவே 4 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று 4ஜி டவர்கள் அமைக்கப்படும் என்றும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் பேசினார்.
இந்நிலையில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில், வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
