'என்னோட பையனுக்கு 3 மாத குழந்தை இருக்கு'...என் தம்பிக்கு என்ன ஆச்சு?...பரிதவிக்கும் சொந்தங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 16, 2019 11:54 AM
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக நியூஸிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
மஸ்ஜித் அல் நூர் மசூதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மசூதியாகும்.நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், இந்த மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தள்ளினர்.இந்த கோரமான தாக்குதலில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டனர்.பலர் பாடுகாயமடைந்தனர்.
அதேபோன்று கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள லின்வுட் ஆவ் மசூதிக்குள்ளும் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கோரமான தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 9 பேர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த இக்பல் ஜஹாங்கீர் எனபவர் கூறுகையில் ''எனது சகோதரர் அகமது ஜஹாங்கீர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.சிகிக்சை பெற்றுவரும் சகோதரரை காண்பதற்கு உடனடியாக நியூசிலாந்த் செல்ல தெலுங்கானா முதல்வரும், வெளியுரவுத்துறை அமைச்சரும் உதவி செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே போல, ஐதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பர்ஹஜ் அஷான் (வயது 31) என்பவரின் நிலையும் என்னவென்று தெரியவில்லை.இவருக்கு 3 வயதில் மக ளும் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.அவர் குடும்பத்தினர், உடனடியாக நியூசிலாந்து செல்ல, வெளியுரவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Indian shot in New Zealand mosque attack, his Hyderabad family seeks urgent visa https://t.co/2Q8EYFnZ6F
— Asaduddin Owaisi (@asadowaisi) March 15, 2019
A video from #ChristChurch shows one Ahmed Jehangir who was shot. His brother Iqbal Jehangir is a resident of Hyderabad & would like to go to NZ for Ahmed’s family.
— Asaduddin Owaisi (@asadowaisi) March 15, 2019
I request @KTRTRS @TelanganaCMO @MEAIndia @SushmaSwaraj to make necessary arrangements for the Khursheed family