'சிவனேனு தானடா போய்ட்டு இருந்தேன்'...என்ன புடிச்சு லாக் பண்ணி... உயிரை காப்பாற்றிய ஐபோன்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 14, 2019 05:03 PM

தன்னை நோக்கி வந்த அம்பை தான் வைத்திருந்த ஐபோன் மூலம் தடுத்து தனது உயிரை ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

iPhone Saved A Man From Bow And Arrow Attack in Australia

ஆஸ்திரேலியாவின் நீயூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் நேற்று காலை 9 மணியளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையின் அருகில் இருந்த வீட்டினுள் வசிக்கும் நபர் ஒருவர்,வெளியே சென்று கொண்டிருந்த நபர் மீது அம்பை விட்டுள்ளார். இதனை கவனித்த அவர் உடனடியாக தனது ஐபோனை எடுத்து வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளார்.ஆனால் அந்த அம்பு ஐபோனை துளைத்துள்ளது.

அம்பு துளைத்த வேகத்தில் அவரின் கையில் இருந்த போன் லேசாக அவரது கன்னத்தில் இடித்ததாக கூறப்படுகிறது. இதில் லேசான கீறல் காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது என்று நீயூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது ' 43 வயது மதிப்பிலான அந்த நபர் தாக்குதலுக்கு ஆளான போது, அவரது கையில் இருந்த ஐபோனால் சிறு கீறல் காயத்துடன் தப்பியுள்ளார்.

இல்லையெனில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கலாம்.மேலும் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #ATTACKED #IPHONE #ARROW